100% ஹெல்மெட் விழிப்புணர்வை முன்னெடுத்து கோவையில் சிறப்பு முகாம் நடத்தி தணிக்கை செய்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து போக்குவரத்து பயிற்சி பூங்காவில் சிறப்பு வகுப்பு எடுத்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சாலை போக்குவரத்து தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் சாலை பாதுகாப்பு வார விழா விமர்சையாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.மாநகர காவல் துறை அதன் ஒரு பகுதியாக 100 % ஹெல்மெட் என்ற விழிப்புணர்வை முன்னெடுத்து என்று மாநகரில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதாவது ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்து நாள் முழுவதும் சாலை போக்குவரத்து தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என மாநகர காவல் துறை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் 15 இடங்களில் இன்று சிறப்பு தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. 400 காவலர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வளர்கள் தணிக்கை பணியில் ஈடுபட்டனர் .
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் தணிக்கை செய்து பிடிக்கப்பட்டு ஆங்காங்கே இருந்த முகாம்களிலேயே அமர வைக்கப்பட்டு ஹெல்மட் முக்கியத்துவம் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இளைஞர்கள் சிலர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள “குழந்தைகள் போக்குவரத்து பயிற்சி பூங்கா” விற்கு அழைத்துச் செல்லப்பட்டு சாலை விதிகள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இது போன்ற சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை