நெல்லை, தூத்துக்குடியில் தற்போது கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு 1923-ம் ஆண்டில் அதே நாளில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெரும் வெள்ளத் பாதிப்பு துயரம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குமரிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி பகல் வரை வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்மாய்கள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், உயிர்ச் சேதம், சொத்துகள் சேதம், வீடுகள் சேதம் ஆகியவற்றால் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடியில் தற்போது கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு 1923-ம் ஆண்டில் அதே நாளில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெரும் வெள்ளத் பாதிப்பு துயரம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 1923- ம் ஆண்டு இதே நாளில் பெருமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது அன்றைக்கு வெளியான செய்தித்தாள்களில் பதிவாகியுள்ளது.
அதில், 1923-ம் ஆண்டு டிசம்பர் 16 முதல் 19-ம் தேதி வரை இதே போல கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். அப்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல கன்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, நெல்லை டவுன், சன்னியாசி கிராமம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளீல் 3 அடியில் இருந்து 5 அடிகள் வரை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
திருநெல்வேலி பாலம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தைச் சுற்றி வெள்ள நீர் 3 நாட்கள் தேங்கி இருந்ததாக அன்றைக்கு தி இந்து நாளிதழில் வெளியான செய்திகளில் பதிவாகி உள்ளது. மேலும், தென்காசி - திருவனந்தபுரம் ரயில்வே பாதையும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“