டி.பி. சத்திரம் பகுதியில் மனைவி மீது இருந்த சந்தேகத்தால் கொலை செய்துவிட்டு, போலீசுக்கு தகவல் கூறி, கணவன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.பி. சத்திரம் பகுதியில் வசித்த தம்பதி:
சென்னை அண்ணா நகர் அடுத்த டி.பி. சத்திரம் பகுதி நியூ காலனியில் வசித்து வந்தவர் சீனிவாசன் மற்றும் அம்மு தம்பதி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3வது வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சீனிவாசன், தனது மனைவி மகனுடன் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நன்றாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமீப காலங்களாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. அடிக்கடி சண்டைப் போடுவதிலேயே தங்களின் வாழ்க்கையை கடந்தனர் இந்த தம்பதி. இந்த தகராறுகளுக்கு எல்லாம் காரணமாக அமைந்தது சீனவாசன் மனைவி மீது கொண்டிருந்த சந்தேகம். இதனால் கணவன் மனைவியிடம் நள்ளிரவு வரை தகராறு நீடிக்கும் என்று சுற்றுவட்டாரத்தில் கூறுகிறார்கள்.
சூடு பிடித்த தகராறு... கழுத்தை அறுத்த கணவன்:
இந்நிலையில் நேற்றும் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்தை அடைய ஆத்திரத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் அம்முவை தாக்கு, அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
இரத்த வெள்லத்தில் இருந்த மனைவியின் சடலத்தை ஓரமாக இழுத்துப் போட்டுவிட்டு, தனது மகனை தூக்கிக் கொண்டு பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். அப்போது எனக்கு அம்முவுக்கும் தகராறு அவளை நான் கொன்னுட்டேன் என்று சீனிவாசன் கூறியுள்ளார். இதனால் பதறிப் போன அவர் பெற்றோர்கள் அவரது வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் உள்ளே செல்லாமல் வெளியே நின்றிருந்தனர்.
பக்கத்து வீட்டார் போல் புகார் அளித்த சீனிவாசன்:
பின்னர், போலீசுக்கு போன் போட்ட சீனிவாசன், பக்கத்து வீட்டார் போல அவரின் வீட்டு விலாசத்தை கொடுத்து, “எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி எந்த நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இரவு முழுவதும் தகராறு தான். பக்கத்து வீட்டில் இருக்கும் எங்களால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. மிகவும் தொல்லையாக இருக்கிரது.” என்று கூறி, போன்னை ஆஃப் செய்து தப்பிச் சென்றார்.
அந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சீனிவாசன் பெற்றோர் பதற்றத்துடன் நிற்பதைப் பார்த்து விசாரித்தார். அப்போது அவர்கள் நடந்த அனைத்தையும் கூறி, மகன் தப்பியோடிவிட்டான் என்றும் கூறினர். அம்முவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளி சீனிவாசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.