Advertisment

சென்னையில் அதிமுக நிர்வாகியின் கணவர் வெட்டிக் கொலை: பதற்றம்

சென்னை மணலிபுதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author-image
WebDesk
New Update
PMK functionary hacked to death near chengalpattu

சென்னை மணலிபுதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை விஞ்சூர் பஞ்சாயத்தில் துணை தலைவியாக இருந்து வருபவர் வைதேகி. இவரின் கணவர் 47 வயதான சுமன். இவர் திங்கள்கிழமை (அக்.2) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

முதலில் கொலையுண்டவர் தொடர்பான அடையாளங்கள் தெரியவில்லை. இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர் வைதேகியின் கணவர் சுமன் எனத் தெரியவந்துள்ளது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் சுமனை பின்தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பின்தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமுற்ற சுமன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மணலிபுதுநகரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment