கோவில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் : ‘ஆண்மையற்றவன்’ என கூறியதால் குருக்களே கொலை செய்தது அம்பலம்

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவிலை சேர்ந்த குருக்கள் பாலகணேஷ் மனைவி பிரியா கொலை வழக்கு. மனைவியைத் தானே கொன்றதாக விசாரணையில் கணவன் ஒப்புதல்

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவிலை சேர்ந்த குருக்கள் பாலகணேஷ் (எ) பிரபு. இவரின் மனைவி பிரியா கடந்த 5 தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் மனைவியைத் தானே கொலை செய்ததாக கணவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 5ம் தேதி பால கணேஷ் மற்றும் பிரியா கட்டிப்போட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக வீட்டு அருகே உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதில் பிரியா பலமாகத் தலையில் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பால கணேஷ் மற்றும் பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பிரியா தாக்கப்பட்ட போதே இறந்து விட்டார் என்று தெரிந்தது. பின்னர் கணவர் பால கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் இருவரும் கட்டிப்போடப்பட்டு நகைகள் மாயமானதால் திருட்டுக்காக நடந்த கொலை என்று முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் வடபழனி காவல்துறையினர், பல்வேறு கோணல்களில் விசாரித்து வந்தனர். இதில் மருத்துவமனையில் இருந்த பால கணேஷிடம் விசாரித்தபோது தனது மனைவியைத் தானே கொலை செய்து நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார்.

எப்போதும் ஏற்படும் வாக்குவாதம் போல் கொலை நடந்த அன்றும் வாக்குவாதம் நிகழ்ந்த நேரம் கோவத்தில் சுத்தியால் பிரியாவின் மண்டையில் அடித்துள்ளார் பால கணேஷ். மேலும், குழந்தை இல்லாததால், பால கணேஷை ‘ஆண்மையற்றவன்’ என்று மனைவி பிரியா கூறியதாக அவர் குறிப்பிட்டார். தன்னை அவ்வாறு கூறியால் கோபத்தில் அடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் மனைவி இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், தந்து நண்பனின் உதவியுடன், இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக பால கணேஷ் கூறினார். காணாமல் போன நகைகள் அனைத்தும் அவரின் நண்பர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்ததே இந்த வழக்கின் திருப்பத்திற்கு காரணமாக அமைந்தது.
இந்த வழக்கின் அடுத்த நிலையாக, கணவர் பால கணேஷ் மற்றும் அவருக்கு உதவிய நண்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

×Close
×Close