நடுவானில் கணவன் மனைவி சண்டை : சென்னையில் தரையிறங்கியது கத்தார் விமானம்

நடுவானில் கணவனுடன் மனைவி சண்டையிட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் இறக்கிவிடப்பட்டனர்.

நடுவானில் கணவனுடன் மனைவி சண்டையிட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் இறக்கிவிடப்பட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
qatar airways

நடுவானில் கணவனுடன் மனைவி சண்டையிட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் இறக்கிவிடப்பட்டனர்.

Advertisment

நேற்று கத்தாரின் தோஹாவில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம். விமானத்தில் தம்பதிகள் குழந்தைகளுடன் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கணவர் நால்ல தூக்கத்தில் இருந்துள்ளார்.

கணவரின் போனை எடுத்த மனைவி, கணவரின் கை விரலை பயன்படுத்தி போனின் லாக்கை எடுத்துள்ளார். அதற்குப் பிறகு கணவர் தமக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாகக் கூறிய அந்த ஈரானியப் பெண், விமானத்தில் பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்.

ஆறுதல் சொன்ன விமான ஊழியர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை.

Advertisment
Advertisements

நிலைமை கைமீற டோஹாவிலிருந்து பாலிக்குச் சென்றுகொண்டிருந்த விமானம், சென்னைக்குத் திசைதிருப்பிவிடப்பட்டது. அங்கு அந்தத் தம்பதியினரும் அவர்களின் குழந்தையும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், விமானம் மற்ற பயணிகளுடன் பாலிக்குப் பயணத்தைத் தொடர்ந்தது. மதுபோதையில் அந்தப் பெண் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

சற்று நேரம் கழித்து, சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் வேறொரு விமானத்தில் குடும்பத்துடன் மலேசியா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் தோஹா செல்வார்கள் என தெரிகிறது.

இது குறித்து கத்தார் விமான அதிகாரிகளிடம் பேசிய போது, ‘அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரசனையால், மற்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால்தான் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்கள். மற்றப்படி அவர்கள் சொந்த பிரச்னையில் நாங்கள் தலையிடவில்லை’ என்றார்கள்.

Chennai Qatar Flight

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: