/indian-express-tamil/media/media_files/2025/08/24/tamilnadu-ongc-2025-08-24-13-35-35.jpg)
Tamilnadu ONGC
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்த நீண்டநாள் விவாதத்திற்கு மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட பகுதிகள்
காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன் கோட்டை தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் இந்தக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இது, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
தமிழக அரசின் நிலைப்பாடு
ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தமிழகத்தின் வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது எனவும், ஏல அறிவிக்கைகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியிருந்தார்.
'பூவுலகின் நண்பர்கள்' கண்டனம்
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனவும் ஏல அறிவிக்கையினை நிறுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) June 13, 2021
தமிழ்நாடு முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்@mkstalinhttps://t.co/WpDOh9mFwIpic.twitter.com/RntlWbPMlH
இந்நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் X பக்கத்தில், ”இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனவும் ஏல அறிவிக்கையினை நிறுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்ததை நினைவூட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.