ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்... 20 இடங்களில் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
crude oil

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி-க்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் இந்த அனுமதி மேலும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கும் நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA), எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப் பணிகளுக்காக, ராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உட்பட 20 இடங்களில் 3,000 மீட்டர் ஆழம் வரை சோதனைக்கு கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி-க்கு அனுமதி அளித்துள்ளது.

ராமநாதபுரம் பகுதி ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அதன் நிலத்தடி நீர் வளத்தையும், விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, எண்ணெய் கிணறுகள் அமைப்பதும், அது சார்ந்த சுரண்டல் நடவடிக்கைகளும் நிலச்சரிவுகள், நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் விவசாய நிலங்களின் அழிவு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு முரணாக, மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி-க்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

Advertisment
Advertisements

சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த திட்டம் மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: