Advertisment

Today news Highlights : சென்னையில் பொதுமக்கள் குப்பை கொட்டக் கட்டணம்- ஸ்டாலின் கண்டனம்

author-image
WebDesk
New Update
News Highlights: ஜன.10 வரை மக்கள் கிராம சபைக் கூட்டம் தொடரும்- ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி அறிவித்த குப்பைக்கொட்டும் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவிடவேண்டும். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால், திமுக ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

முதல்வர் பதவி மீது ஆசை இருக்கலாம் ஆனால் வெறி இருக்க கூடாது என கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, ஒரு மதத்தை நேசித்து மற்ற மதத்தை தவறாக பேசுபவன் நானில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மீது குறை செல்பவர்களை இயேசு நாதர் பார்த்துக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் அனுமதி பயணிக்க இன்று முதல் அனுமதி அளித்துள்ள தெற்கு ரயில்வே, கூட்டநெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணெலி காட்சி வாயிலான இனறு நடைபெறுகிறது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாவானி சாகர் அனையில் 94.11 அடியாக உள்ளது. அணையில் 24.3 டிஎம்சி நீர் இருப்பும், நீர் வரத்து 406 கன அடியாக உள்ளது. அனையில் இருந்து 2350 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 28-வது நாளடாக விவசாயிகள் போராட்டம்தொடகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Today tamil news : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்














Highlights

    21:58 (IST)23 Dec 2020

    மத்திய அரசு விளக்கம்

    தேசிய பணியாளர் தேர்வு முகமை எந்தவொரு பணிக்கும் விண்ணப்பங்களை கோரவில்லை என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

    21:15 (IST)23 Dec 2020

    ஆன்லைன் கடன் செயலிகள் குறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை

    ஆன்லைன் கடன் செயலிகள் குறித்து சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு எச்சரிக்கை  அறிவிப்பை வெளியிட்டது. 

     

    20:18 (IST)23 Dec 2020

    இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு ரத்து

    இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. 

      

    20:15 (IST)23 Dec 2020

    கோவின் (CoWIN) டிஜிட்டல் தளம்

    கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அதனை தேசிய அளவில் முறையாக வழங்கும் நோக்கத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இணைந்து பிரம்மாண்ட சவாலான கோவின் (CoWIN) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளன.

    இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கண்டுபிடிப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியாவில் கொவிட்-19 தடுப்பு மருந்தை கோவின் தளத்தின் வாயிலாக வழங்கும் பிரம்மாண்ட சவாலில் கண்டுபிடிப்பாளர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்”, என்று தெரிவித்தார்.

    18:19 (IST)23 Dec 2020

    59,000 கோடியை கல்வி உதவித் தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    18:15 (IST)23 Dec 2020

    இங்கிலாந்திலிருந்து வந்த 16 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

    இங்கிலாந்து நாட்டிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு இந்த மாதம் வந்துள்ள 16-பேர் தனிமைபடுத்தி கண்காணித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

    ‘சார்ஸ்-கோவிட் - 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் மாறுபாடு, 17 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது ஸ்பைக் புரதத்தில் உள்ள என்501ஒய் மாற்றம். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது.

    18:11 (IST)23 Dec 2020

    டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இந்த திருத்தத்தின் கீழ், டிடிஎச் லைசென்ஸ் 20 வருட காலத்துக்கு வழங்கப்படும்.  காலாண்டுக்கு ஒருமுறை லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் டிடிஎச் உள்கட்டமைப்பு வசதிகள் டிடிஎச் நிறுவங்களிடையே பகிர்ந்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.  

    17:13 (IST)23 Dec 2020

    தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைப்பு

    திரைப்படப் பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

    17:07 (IST)23 Dec 2020

    உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தம்: ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் வெற்றி

    மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

    இதையடுத்து, இரு மாநிலங்களும் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம் ரூ. 4,898 கோடி கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    16:57 (IST)23 Dec 2020

    பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை - 25-ஆம் தேதி வெளியிடப்படும்

    பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.   

    16:55 (IST)23 Dec 2020

    புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு - மத்திய அரசு எஸ்ஓபி வெளியிட்டது

    ‘சார்ஸ்-கோவிட் - 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு தொடர்பான தொற்று நோயியல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    நுழைவுப் பகுதி மற்றும் கடந்த 4 வாரங்களில் ( நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை) இங்கிலாந்திலிருந்து அல்லது இங்கிலாந்து வழியாக மாறி வந்த சர்வதேசப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களிடம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேணடும் என எஸ்ஓபி-யில் தெரிவிக்கப்பட்டது

    16:34 (IST)23 Dec 2020

    திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

    “சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்- அதாவது குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்ற தமிழக அரசின்  அறிவிப்புக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்தர் 

    16:33 (IST)23 Dec 2020

    சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

    டிச.1ல் வெளியிடப்பட்ட காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.  

    15:58 (IST)23 Dec 2020

    சென்னை வரும் ரஜினிகாந்த்!

    நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை . அண்ணாத்த படப்பிடிப்பின்போது 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து,  நடிகர் ரஜினிகாந்த், ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்புகிறார். 

    15:21 (IST)23 Dec 2020

    அண்ணாத்த படபிடிப்பு நிறுத்தம்!

    அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் . படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று எனத் தகவல் .  ஐதராபாத்தில் டிசம்பர் 14ம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் .  சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

    15:01 (IST)23 Dec 2020

    ரஜினிகாந்த் கட்சி விழா!

    நடிகர் ரஜினியின் கட்சி அறிவிப்பு விழா மதுரையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 

    14:02 (IST)23 Dec 2020

    ரயிலில் செல்லலாம்!

    இன்று 23ம் தேதி முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.  கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி இனிமேல் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும்,  மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    14:00 (IST)23 Dec 2020

    மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

    வரும் 28 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.  இங்கிலாந்திலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முக்கிய ஆலோசனை . தமிழகத்தில் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

    13:56 (IST)23 Dec 2020

    இளையராஜாவுக்கு அனுமதி!

    பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி . காலை 9 மணி முதல் 4 மணி வரை ஸ்டூடியோவுக்குள் இருக்கலாம்.  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    13:26 (IST)23 Dec 2020

    பாஜக் தேர்தல் அறிக்கை!

    2021 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை.  சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு. 

    13:16 (IST)23 Dec 2020

    புதியவகை கொரோனா!

    பிரிட்டனில் புதியவகை கொரோனா . தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு பிரிட்டனில் இருந்து வந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம் கடந்த ஒருமாதத்தில் தமிழகம் வந்த 2,750 பேர் அடையாளம் காணப்பட்டனர்

    13:15 (IST)23 Dec 2020

    சூரப்பா விவகாரத்தில், வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு.!

    அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு .வரும் திங்கள் கிழமை, உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு உத்தரவு .

    13:14 (IST)23 Dec 2020

    திமுக தொடர்ந்த வழக்கு!

    முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்த‌து சென்னை உயர்நீதிமன்றம். 

    13:09 (IST)23 Dec 2020

    கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கு!

    கர்நாடகாவில் இன்று முதல் ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல் . இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என எடியூரப்பா அறிவிப்பு. 

    10:56 (IST)23 Dec 2020

    சென்னையில் ஜனவரி 1- முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம்

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என தனித்தனி கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:51 (IST)23 Dec 2020

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த பண்டிகையின் போது நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    10:48 (IST)23 Dec 2020

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி - ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

    கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    10:45 (IST)23 Dec 2020

    மதுரை மருத்துவக்கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், மதுரை மருத்துவக்கல்லூரியில், மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    Tamil news :  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கட்சியின் மு்க்கிய தலைவர்கள் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்த புகார் ஒன்றை முன்வைத்துள்ளனர். 97 பக்கங்கள் கொண்ட அந்த புகார் மனுவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான ஊழல்கள் மற்றும் சொத்துக்குவிப்பு விபரங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2021-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  ஆண்டின் கடைசி நாளில் புத்தாண்டை வரவேற்க இரவு முழுவதும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், டிசம்பர் 31ம் தேதியன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.

    Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment