ஜெயலலிதாவின் சகோதரர் நான் என்றும் அவரது சொத்தில் 50 % எனக்கு தர வேண்டும் என்று மைசூரை சேர்ந்த முதியவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஜெயலலிதாவின் சகோதரர் நான் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த வாசுதேவன், இவருக்கு வயது 83 ஆகிறது. இவர் ஜெயலலிதாவின் சொத்தில் 50 % பங்கு கேட்டு இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா, எனது அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், இதனை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்து தீபா மற்றும் தீபக்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் இதற்கு இருதரப்பினரும் பதில் அளிக்கவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இது விசாரணைக்காக பட்டியலிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil