Advertisment

'தமிழனாக பெருமைப்படுகிறேன்'- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டி.வி.எஸ் வேணு சீனிவாசன்

"தமிழனாக தாம் பெருமைப்படுகிறேன்" என டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூறினார். சென்னையில் உலக முதலீட்டாள்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
TVS Group Chairman Venu Srinivasan at the Global Investors Conference in Chennai

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.7,2024) நாளையும் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெறுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத்  மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.7,2024) நாளையும் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெறுகிறது.

Advertisment

இந்த மாநாட்டில் TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாம் ஒரு தமிழனாக பெருமப்படுகிறேன்” என்றார்.

அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் முதலீட்டாளர்களைக் அழைத்துவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.

மேலும் முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இதுவரை 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. தற்போது நடைபெறுவது 3-வது மாநாடு ஆகும்.

இதற்கு முன் 2015 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2,42,160 கோடி முதலீடுகளை இருக்கும் விதமாக 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

அப்போது,  4 லட்சத்து 70 ஆயிரத்து 65 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடத்தப்பட்டது. அப்போது 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த மாநாட்டில் மூன்று லட்சத்து 501 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டை இருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment