Advertisment

எனது உயிருக்கு மிரட்டல்; மோடியை சந்திப்பேன்: மதுரை ஆதீனம்

இந்து நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் தலையிட்டால் எந்த அமைச்சரும் அல்லது எம்எல்ஏவும் சுதந்திரமாக சாலையில் நடக்க முடியாது – மதுரை ஆதீனம்

author-image
WebDesk
New Update
எனது உயிருக்கு மிரட்டல்; மோடியை சந்திப்பேன்: மதுரை ஆதீனம்

I have threat to my life, going to meet PM Modi, says Madurai mutt chief amid row over ritual ban: தமிழகத்தின் தருமபுரம் மடத்தில் 'பட்டின பிரவேசம்' சடங்குக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மற்றொரு மடத்தின் தலைவரான மதுரை ஆதீனம், தடை உத்தரவை எதிர்த்துப் பேசியதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது பற்றி பிரதமரைச் சந்தித்துச் பேசப் போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துக்களை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார்.

மேலும், “நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள்,'' என்றும் ஆதீனம் கூறினார். பின்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் ஆதீனம் கூறினார்.

தருமபுரம் மடத்தின் 'பட்டின பிரவேசம்' (ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லும் பழங்கால பாரம்பரியம்) சடங்குக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம், இந்த சடங்கு 500 ஆண்டுகள் பழமையானது. மதச்சார்பற்ற நாடு என்று கூறும் நாடு ஒரு மதத்திற்கு மட்டும் அநீதி இழைக்கக் கூடாது என்று கூறினார்.

“இந்து மதம் குறிவைக்கப்படுகிறது. இந்து மதத்தை அழிக்கப் பார்க்கிறார்களா? ஆங்கிலேயர்கள் கூட அதைச் செய்வதில் வெற்றி பெறவில்லை, இவர்களால் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்,” என்று கூறிய ஆதீனம், இந்து நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் தலையிட்டால் எந்த அமைச்சரும் அல்லது எம்எல்ஏவும் சுதந்திரமாக சாலையில் நடக்க முடியாது என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்: சென்னையில் அதிக எஃப்.எஸ்.ஐ மூலம் உயரமான கட்டிடங்களுக்கு அனுமதி; சாலைகளை விரிவாக்க முயற்சி

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சடங்கு மீதான தடையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நிகழ்ச்சி நடைபெறும் மே 22-ஆம் தேதிக்குள் தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி சுமுகத் தீர்வு காண்பார் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Madurai Madurai Aadheenam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment