கஜ புயல் நரேந்திர மோடி ட்வீட் : கடந்த இரண்டு நாட்களாக கஜ புயலின் தாக்கம் மற்றும் அதன் பின்னால் உள் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் கனமழை காரணமாக பலத்த சேதத்தினை அடைந்திருக்கிறது தமிழகம்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் கஜ புயலினால் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் காண விரைந்தனர். நேற்று உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “தமிழக அரசிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக செய்யும்” என்று கூறி ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க : கஜ பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூடு பிடிக்கும் மீட்புப் பணிகள்
கஜ புயல் நரேந்திர மோடி ட்வீட்
நரேந்திர மோடி பதிவு செய்துள்ள ட்விட்டர் கருத்தில், “திரு. எடப்பாடி பழனிசாமியுடன் புயல் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிலை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டேன்.
மேலும் மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரண உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்தேன். தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Spoke to the Chief Minister of Tamil Nadu, Thiru Edappadi K. Palaniswami regarding the situation arising due to cyclone conditions in the state. Assured all possible help from the Centre.
I pray for the safety and well-being of the people of Tamil Nadu. @CMOTamilNadu
— Narendra Modi (@narendramodi) 16 November 2018
அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில் என்னுடைய எண்ணமெல்லாம் கஜ புயலினால் பலியானவர்களின் குடும்பத்தினர் மீது தான் இருக்கிறது. கஜ புயலில் சிக்கி பாதிப்பிற்குள்ளானவர்கள் விரைந்து குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அரசு தரப்பில் இருந்து அனைத்து வகையான உதவிகளும் விரைவாக செய்யப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
My thoughts are with the families of those who lost their lives due to cyclonic conditions in parts of Tamil Nadu. I pray for the quick recovery of those injured. Officials are working towards providing all possible assistance in the wake of the cyclone.
— Narendra Modi (@narendramodi) 16 November 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.