Advertisment

2006-க்கு பிறகு எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை: செந்தில் பாலாஜி விளக்கம்

'2006 தொடங்கி இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட நானோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ ஒரு சொத்து கூட வாங்கவில்லை' என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
I-T searches at locations linked to TN minister Senthil Balaji; press meet Tamil News

TN Minister Senthil balaji

Tamilndu Minister V. Senthil Balaji Tamil News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கரூரில் வருமான வரி சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், வருமான வரிச் சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

publive-image

சென்னை மற்றும் கரூரில் உள்ள என்னுடைய இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அதைப் பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது. சோதனை முடிந்த பிறகு விளக்கம் அளிக்கிறேன். வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போதும் கூட இதுபோன்ற சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையினர் கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராகவே உள்ளோம். எனது சகோதரரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்.

ஏறத்தாழ 26 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கிறேன். தமிழக முதல்வர் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். நான் போட்டியிட்ட 2006 சட்டமன்ற முதல் தேர்தலில் என்ன சொத்து மதிப்பு தாக்கல் செய்து இருந்தேனோ அதன்பிறகு இன்று வரை இடையிலே ஒரு சொத்து விற்பனை செய்திருக்கின்றேன். 2006 தொடங்கி இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட நானோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ ஒரு சொத்து கூட வாங்கவில்லை, பதிவு செய்யவில்லை. அதுபோன்ற செயல்களில் நங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்." என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu V Senthil Balaji Income Tax Department Karur Income Tax Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment