பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை சிக்கல் பற்றியே பேசினேன்: பி.டி.ஆர் விளக்கம்!

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Palanivel Thiyagarajan

I talked about the practical problem of the old pension scheme said Minister PTR

செய்தி: மணி, மதுரை

உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Advertisment

மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "உச்சநீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது, ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைபிடிக்க தேவையில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது,

பேரறிவாளன் தீர்ப்பில் ஆளுநர் உட்பட அனைவரின் பணிகள் என்ன என்பது மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும், அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.

Advertisment
Advertisements

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன.

இந்த நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கவை.

ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக்காட்டி உள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை, மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது.

உச்ச நீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் இதுவரை பதில் இல்லாமல் நிலுவையில் உள்ளது. வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைத்து உள்ளோம்.

மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாகயத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.

கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்" என அமைச்சர் பிடிஆர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: