scorecardresearch

தி.மு.க.வில் சேர மாட்டேன்.. காரணம் இதுதான்.. வரிச்சூர் செல்வம்

திமுகவில் தான் இணைந்தால் அதை ரவுடி கட்சி என்று அழைக்கக்கூடும் என்பதால் சேர விரும்பவில்லை என்று வரிச்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் சேர மாட்டேன்.. காரணம் இதுதான்.. வரிச்சூர் செல்வம்

திமுகவில் தான் இணைந்தால் அதை ரவுடி கட்சி என்று அழைக்கக்கூடும்  என்பதால் சேர விரும்பவில்லை என்று வரிச்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி சூரியா பற்றிய சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ” ரவுடி என்ற பட்டம்  எனக்கு  காவல்துறை  கொடுத்தது. இன்னும் 2 வருடங்களில் காவல்துறையே என்னை ரவுடி என்று கருதாது. திருச்சி சிறையிலிருந்து வரும்போது, தேங்காய் உடைத்து இனி சிறைக்கு வரமாட்டேன் என்று கூறினேன். காவல்துறை என்னை ரவுடி என்று நினைப்பதால் என்னால் ஒரு கட்சிக்கு அவப் பெயர் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். எனது அப்பா திமுகவின் விஸ்வாசி. மதுரை செல்லூரில் கலைஞர் எடைக்கு எடை நாணயம் கொடுத்தார். அதை அப்பவுக்கு கலைஞர் கொடுத்தார்.

அந்த அளவுக்கு அப்பா திமுகவில் இருந்தவர். எனது தோற்றத்தால் நான் கட்சியில் சேர முடியாது. இப்படியே சென்று கட்சியில் சேர முடியுமா என்ன? . எனக்கு வெள்ளை வேஷ்டி சட்டை போடுவது பிடிக்காது. இதனால் நான் அரசியல் இருந்து விலகியிருக்கிறேன். எனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டால் என்னிடம் எல்லாம் இருக்கிறது. என்னை ’தாத்தா’ என்று கூப்பிடுங்கள். அல்லது ’ஜோக் மேன்’ என்று கூட கூப்பிடுங்கள். ரவுடி என்று ஏன் என்னை அழைக்கிறீர்கள். திருச்சி சூரியா சமீபத்தில் பேருந்தை திருடிவிட்டார். அதனால் அவரை நான் பேருந்து திருடன் என்று கூற முடியுமா? . ஒரு மனிதனை இழிவுப்படுதக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: I will not join in dmk this is the reason varinjur selvam

Best of Express