சமீபத்திய குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு ஏழு தசாப்தங்களுக்கு முன்னர், நீலகிரி மாவட்டத்தில் ஏர் இந்தியா டக்ளஸ் C-47B விமானம் கீழ் கோத்தகிரி அருகே விபத்துக்குள்ளானது, அதில் 20 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர் என தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 8, புதன்கிழமை மதியம், நீலகிரியின் குன்னூர் காட் பகுதியில் இந்திய விமானப்படையின் MI-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பாதுகாப்புப் படைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது மோசமான விமான விபத்து ஆகும்.
ஏழு தசாப்தங்களுக்கு முன்னர், டிசம்பர் 13, 1950 அன்று, நீலகிரி மாவட்டத்தில் ஏர் இந்தியா டக்ளஸ் C-47B விமானம் நீலகிரியில் உள்ள கீழ் கோத்தகிரி அருகே விபத்துக்குள்ளானது, அதில் 20 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் முக்கிய புள்ளியியல் நிபுணர் ஒருவரும் உயிரிழந்தார். இந்த விமானம், சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் தரையிறங்கிய பிறகு திருவனந்தபுரம் நோக்கிச் சென்றது. . பெங்களூரில் இருந்து கோயம்புத்தூரில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விமானம் காணாமல் போனதாக தி இந்து ஆவணக்காப்பகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானி, கேப்டன் ஆண்ட்ரூ வைஸ்மேன், துணை விமானி கேப்டன் ராம்நாத் நாராயண் அய்யர் மற்றும் வானொலி அதிகாரி காசர்கோடு அப்பு ஷெனாய் ஆகியோர் காலை 10.20 மணிக்கு திட்டமிடப்பட்ட தரையிறங்கும் நேரத்திற்கு 12 நிமிடங்களுக்கு முன்னதாக கோயம்புத்தூர் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாக அனுப்பப்பட்ட "ஆபத்து எச்சரிக்கை அறிக்கை" வெளியிடப்பட்டது. கோயம்புத்தூரில் மேகங்கள் குறைவாக இருப்பதாக கோயம்புத்தூர் ஆய்வகத்திற்கு சென்னையிலிருந்து காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்தது. நாளின் பிற்பகுதியில், முழு வழியிலும் சென்ற தேடுதல் விமானங்கள் மோசமான வானிலை மற்றும் நீலகிரி மலைத்தொடர்களின் அடர்த்தி காரணமாக தேடுதல் பணி தொய்வடைந்தது. மேலும் விமானம் இந்தப் பகுதியில் கீழே விழுந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
பயணிகளில், இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியரும் இந்திய அரசாங்கத்தின் விருந்தினருமான பேராசிரியர் ஆபிரகாம் வால்ட் ஆகியோர் அடங்குவர்.
இரண்டு வனக் காவலர்களின் தகவலின் அடிப்படையில், இராணுவத் தேடுதல் குழுக்கள் விமானத்திற்கான தேடுதல் பணியை தீவிரப்படுத்தின. அது "மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்ட பகுதியாகும், அதில் பல காட்டெருமைகள் மற்றும் யானைகள் சுற்றித் திரிகின்றன" என்று அறிக்கை கூறுகிறது. இறுதியில் சிதைந்த உடல்கள், அஞ்சல் உறைகள் மற்றும் பயணிகள் உடைமைகளுடன் விமானம் நொறுங்கிய நிலையில், டிசம்பர் 19 அன்று ரங்கசுவாமி மலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு ஆவணக் காப்பக அறிக்கை, டிசம்பர் 21 அன்று, விசாரணை அமைக்கப்பட்டதாக, தகவல் தொடர்பு துணை அமைச்சர் குர்ஷத் லால் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது வானிலையையும் கவனிக்க வேண்டிய காரணியாக அமைச்சர் எடுத்துரைத்திருந்தார்.
நீலகிரி ஆவண மையத்தின் கெளரவ இயக்குநர் தர்மலிங்கம் வேணுகோபால், இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றியில் பேராசிரியர் வால்டின் முக்கியப் பங்காற்றியதாக தி இந்துவிடம் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.