scorecardresearch

மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் மரணம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார்

மதுரை எய்ம்ஸ் தலைவர், மருத்துவர் நாகராஜன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் மரணம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார்

மதுரை எய்ம்ஸ் தலைவர்,  மருத்துவர் நாகராஜன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார் மற்றும் பிரபல நரம்பியல் மருத்துவர் வி.நாகராஜன். இவர் மதுரையை சேர்ந்தவர்.  கடந்த ஆண்டு அக்டோபர்  22-ம் தேதி மதுரை ஏய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.  தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் கெளரவப் பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையின் நெறிமுறைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பேரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ias officer radhakrishnan reative doctor nagarajan