தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (ஜன 31) வெளியிட்டார். அதில், "திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகன சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சி. சௌந்தரவல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வணிகவரி இணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கல்வி ஆணையராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்ய நீலம் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை இணை ஆணையராகச் சராயு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியாக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் துணை ஆட்சியராக கிஷன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.டி.சி. மேலாண் இயக்குநராகப் பிரபு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.