யுனென்ஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலைப்பாதையில் ஓடும் மலை ரயில் இந்தியாவில் மிகப் பழமையான ரயில். 1899-லிருந்து செயல்பட்டு வரும் இந்த ரயில் பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.
இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும் பெட்டிகள் சுமார் 40 ஆண்டுகள் பழமையானவை. இந்நிலையில் சென்னையில் இயங்கும் ஐ.சி.எஃப் தொழிற்சாலை அதி நவீன பெட்டிகளை இந்த மலை ரயிலுக்கு தயாரித்துள்ளது.
மொத்தம் 15 ஸ்டீல் பெட்டிகளை தயாரித்துத் தர முன்வந்திருக்கும் ஐ.சி.எஃப், முதல் தவணையாக 1 முதல் வகுப்பு, 2 இரண்டாம் வகுப்பு, 1 லக்கேஜ் பெட்டி என மொத்தம் 4 பெட்டிகளை சேலம் கோட்டத்திற்கு அனுப்பியுள்ளது.
சேலத்திலிருந்து ரயில் பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைந்து, அங்கு மலை ரயிலில் இணைக்கப்பட்டு சேவை தொடங்கப்படும். மற்ற 11 பெட்டிகளும் விரைவில் தயாரித்து அனுப்பப்படும்.
ஸ்டீல் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, லக்கேஜ் பெட்டியுடன் கூடிய பேஸஞ்சர் வகுப்பு என மூன்று வித்தியாச கோச்கள் உள்ளன. குஷன் சீட், எல்.இ.டி விளக்குகள் மற்றும் மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.
பிறகென்ன இந்த வருட கோடை சுற்றுலாவில், மிஸ் பண்ணாமல் இந்த மலை ரயிலிலும் ஒரு விசிட் செய்யுங்கள்!