Advertisment

கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை.. கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

author-image
WebDesk
New Update
Saidapet court has issued a warrant against late actor Sivaji Ganesans son Ram Kumar and grandson Dushyant

ராம்குமார், துஷ்யந்த் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியின்படி பணத்தை திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

208ஆம் ஆண்டு அரியலூர் அருகேயுள்ள சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 20 சிலைகள் திருடப்பட்டன. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இந்த விசாரணையில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய-மாநில அரசின் பெருமுயற்சியின் காரணமாக அந்தச் சிலைகள் மீட்டு கொண்டுவரப்பட்டன.

இந்த வழக்கில் பிரபல கடத்தல் மன்னர் சுபாஷ் சந்திர கபூர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த நிலையில், சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment