scorecardresearch

கோவையில் சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் சோதனை

கோவை உக்கடம் – செல்வபுரம் புறவழிச் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்ற சாமியார் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

coimbatore news, latest tamil news, coimbatore, idol smuggling

கோவை உக்கடம் – செல்வபுரம் புறவழிச் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்ற சாமியார் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

பாஸ்கர சுவாமிகள் வீட்டில் நான்கு அடி ஐம்பொன் முருகர் சிலை வைத்துள்ளது தொடர்பாக தகவலின் பேரில் சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் மூன்று மணி நேரமாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாஸ்கர சுவாமிகள் இவரே சிலையை தயாரிப்பதாக சிலை தடுப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிலை தயாரிப்பது போன்ற வீடியோக்களையும் சிலை தடுப்பு அதிகாரிகளிடம் தயாரித்ததற்கு சான்றாக காண்பித்துள்ளார்.

இருப்பினும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்கள் தொடர்பாக வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா ??என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்துள்ளதால் சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சிலை சுமார் 200 கிலோ வரை இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Idol smuggling prevention wing police conduct raid at coimbatore