சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாாி பொன். மாணிக்கவேல் மீது சக காவலர்கள் 13 பேர் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.
பொன். மாணிக்கவேல் மீது புகார்:
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வந்தார்.இதனை எதிா்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிலைக் கடத்தல் வழக்கில் தனது அதிரடியான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மூலம் பொன் மாணிக்கவேல் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமூகவலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம் பெற்றுள்ள காவலா்கள் 13 போ் நேற்றைய தினம் டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகாா் ஒன்றை அளித்துள்ளனா்.தமிழக காவல் துறை தலைமையகத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்செல்வன், ஆய்வாளர் பன்னீர் செல்வம், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேர் பொன். மாணிக்கவேல் மீது 2 பக்கம் அடங்கிய புகாரை அளித்தனர்.
அதில், சிறப்பு அதிகாாி பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளில் உரிய சாட்சியங்கள் இல்லாத நிலையில் வழக்குகளை பதிவு செய்யக்கூறி வற்புறுத்துவதாக தொிவித்துள்ளனா்.
மேலும் வழக்குப்பதிவு செய்ய மறுத்த தங்களை பொன் மாணிக்கவேல் மிரட்டுவதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்,பொன் மாணிக்கவேல் மீது சக காவலர்கள் இப்படியொரு புகாரை அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 13 காவலா்கள் அளித்த புகாரின் பேரில் சிறப்பு அதிகாாி பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்மையான விசாரணை என ஒருபக்க மற்ற காவலர்கள் பொன். மாணிக்கவேல் - யை புகழ்ந்து தள்ளும் நேரத்தில், சக காவலர்களான 13 பேர் அவர் மீது நேரடியாக புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதே சமயத்தில் பொன் மாணிக்கவேலின் பணியை தடுக்கவே இதுபோன்ற புகாா்கள் அளிக்கப்பட்டிருப்பதாக முக்கிய பிரமுகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏ.டி.எஸ்.பி இளங்கோவின் கருத்து
இந்த புகார்கள் குறித்து ஏ.டி.எஸ்.பி இளங்கோ தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். சிலை கடத்தல் தொடர்பாக சுமார் 333 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் ஒரு சில வழக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போன பல சிலைகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் கைது செய்ய மட்டும் நிர்பந்திக்கிறார் மாணிக்கவேல் என்று கூறிய அவர், இனிமேல் அவர் தலைமையில் வேலை செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.