Idols Smuggling and CBI Inquiry: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் தனிப்பிரிவை அமைத்துள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: அரசாணையை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி முறையீடு To Read, Click Here
இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் நேற்று (ஆகஸ்ட் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம், சிறப்பு குழுவை நியமித்துள்ள நிலையில், வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்ற முடியுமா என அரசுத்தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Idols Smuggling: சிபிஐ விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும், மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், சிலை கடத்தல் வழக்குகளை தனிப்பிரிவு விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து ,உச்ச நீதிமன்றம் சென்ற போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது தமிழக அரசு, திடீரென சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்படுகின்றன என பதிலளித்தார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மகாதேவன், 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.