/tamil-ie/media/media_files/uploads/2020/04/R-1.jpg)
IE Tamil Facebook live Dr C Panneer Selvan
IE Tamil Facebook live Dr C Panneer Selvan : கொரோனா வைரஸால் 30 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் அடங்கிப் போய் உள்ளனர். பல்வேறு முக்கியமான பணிகளை அவர்களை மேற்கொண்டாலும், வெளியுலக மனிதர்கள், வெளியுலக வாழ்வினை பார்க்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாவது வழக்கமான ஒன்றாகும். அப்படி மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் அதில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும். நம்முடன் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வருகிறார் மனநல மருத்துவர் சி. பன்னீர் செல்வன்.
1994ம் ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றார். மனநல மருத்துவத்துவத்தில் எம்.டி. பட்டத்தினை 1999ம் ஆண்டு பெற்றார். தற்போது திருநெல்வேலியில் அமைந்திருக்கும் ஸ்நேகா மைண்ட் செண்டரில் (Sneha Mind Care Center) இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேட்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக மாலை 05:00 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ -ல் இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.