IE Tamil Facebook live MP Su.thirunavukkarasar exclusive : கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு நாளும், ஐ.இ. முகநூல் நேரலை வழியாக ஐ.இ. வாசகர்களை சந்தித்து வருகிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். எம்.பி.எக்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்கும் இந்த நேரலையில் இன்று திருச்சி தொகுதி எம்.பி. சு. திருநாவுக்கரசர் இன்று நம்முடன் முகநூல் நேரலையில் பங்கேற்கவுள்ளார்.
இன்று மாலை சரியாக 06:30 மணிக்கு இந்த முகநூல் நேரலையில் பங்கேற்க நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். கொரோனா காலத்தில் ஆளும் கட்சி செய்திருக்கும் நடவடிக்கைகள், அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார திட்டங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் என பல்வேறு விசயங்கள் குறித்து நம்மிடம் உரையாட உள்ளார். அவரிடம் நீங்கள் ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பினாலும் தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“