IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri
IE Tamil Facebook Live Tamil Nadu Congress party president KS Alagiri : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எஸ். அழகிரி இன்று நம்முடன் முகநூல் நேரலையில் பேச உள்ளார்.
Advertisment
இந்த லாக்டவுன் காலத்தில் அரசியல் கட்சி தலைவர்களையும், ஐ.இ. தமிழ் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது ஐ.இ.தமிழ். அந்த வரிசையில் இன்று நம்முடன், தன்னுடைய அரசியல் அனுபவத்தையும், இந்த லாக்டவுன் காலத்தில் எதிர்கட்சியினர் எவ்வாறு பங்காற்றி வருகின்றனர் என்பது குறித்தும் அவர் பேச உள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணத்தை ஏற்றுக் கொண்டது, ரகுராம் ராஜனுடனான ராகுல் காந்தியின் உரையாடல், இந்த லாக்டவுனுக்கு பின்னால் ஏற்பட இருக்கும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது குறித்தும் காங்கிரஸ் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் நீங்கள் அவருடன் பேசலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இன்று மாலை சரியாக 06 :00 மணிக்கு நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil