/tamil-ie/media/media_files/uploads/2020/06/Gayu_12127.314a8e.jpg)
IE Tamil Facebook live with BJP Tamil Nadu art division secretary Gayathri Raguram
IE Tamil Facebook live with BJP Tamil Nadu art division secretary Gayathri Raguram : கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களை சந்தித்து பேசி வருகின்றனர் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள். அந்த வகையில் இன்று ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் இணைகிறார் காயத்ரி ரகுராம்.
கலை மற்றும் அரசியல் என இரண்டு தளங்களிலும் சரிசமமாக தன்னை இயக்கி வரும் இவர் கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து பேச உள்ளார். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களான நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொண்டு, அரசிற்கு இக்கட்டான சூழலில் உதவ முடியும் என்பது குறித்தும் நம்மிடம் பேச உள்ளார்.
தமிழக பாஜக கலை பிரிவின் செயலாளராக இருக்கும் இவர் நடன ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார். இவரின் நேரலையை காண விரும்பும் ரசிகர்கள் இன்று மாலை சரியாக 7.00 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.