ஐஇ தமிழ் முகநூல் நேரலை: நேயர்களுடன் உரையாடிய திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் (வீடியோ)

அரசியல் உலகில் தனது பங்களிப்பு குறித்தும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் தனது கருத்துகளை இன்று நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் மா.சுப்பிரமணியன்

ietamil fb live ma subramaian
ietamil fb live ma subramaian

IE Tamil FB Live Exclusive Ma Subramanian: கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் லாக் டவுனில் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் பிரபலங்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது ஐ.இ. தமிழ் இணையம் மற்றும் முகநூல் பக்கம்.

ஒவ்வொரு நாளும் அதிகாரிகள், நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் போன்ற பல்வேறு நபர்கள் தங்களின் துறைசார் அனுபவங்கள் மற்றும் லாக்டவுன் அனுபவங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் – சென்னை தொடர்ந்து டாப்

அந்த வரிசையில் இன்று (மே.17) நம்முடன் இணைந்து முன்னாள் சென்னை மேயரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தனது துறைசார் அனுபவங்களையும், அரசியல் உலகில் தனது பங்களிப்பு குறித்தும், தமிழக மற்றும் மத்திய அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் தனது கருத்துகளை இன்று நேயர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு, நேரலையில் அவர் பங்குபெற்றார்.


முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனுக்கு உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சிசெய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இவர் ஒரு மாரத்தான் வீரரும் கூட. இதுவரை 100 மாரத்தான் போட்டிகளைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ie tamil fb live former chennai mayor and dmk mla ma subramanian

Next Story
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் – சென்னை தொடர்ந்து டாப்corona virus, tamil nadu, chennai, Covid 19, health deaprtment, covid cases in chennai, corona infection, corona affected districts in tamil nadu, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com