உதயநிதி அமைச்சர் பதவி ஏற்பது குறித்து எல்லா ஊடகங்களையும் முந்திக்கொண்டு ஐ.இ தமிழ் முதலில் தேதியுடன் துல்லியமாக உறுதியான செய்தியை வெளியிட்டது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து, தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த செய்தி உண்மையாகிறது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து பெரும்பாலான ஊடகங்கள் ஊகங்களாகவும் வட்டாரங்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், ஐ.இ தமிழ் உதயநிதி டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராகிறார் என்று தேதியுடன் துல்லியமாக உறுதியாக முதலில் செய்தி வெளியிட்டது. அதன்படி, உதயநிதி டிசம்பர் 14-ம் தேதி அமைச்சர் பதவி ஏற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து பெரும்பான்மை மீடியா, எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் டிச. 12-ம் தேதியே இந்த தகவலை பேச ஆரம்பித்தார்கள். ஆனால், டிச. 11-ம் தேதி இந்த செய்தியை பதவி ஏற்பு தேதியுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பிரேக் செய்தது. அதன்படி, உதயநிதி டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கிறார்.
இதன் மூலம் ஐ.இ தமிழ் தளம் செய்தியை துல்லியமாகவும் உறுதியாகவும் நம்பகத் தன்மையுடனும் முந்திக் கொடுத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"