பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐ.இ தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக பழங்குடியினர் நலத்துறை இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால் பழங்குடியினர் நலத்துறை உடனே நடவடிக்கை எடுக்குமா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (ஐ.இ. தமிழ்) தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) செய்தி வெளியானது. அதில், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரையிடம் இது குறித்து கருத்து கேட்டதற்கு சரிபார்த்துவிட்டு சொல்வதாகக் கூறினார் என்பதைக் குறிப்பிட்டு இருந்தோம்.
இதையடுத்து, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை திங்கள்கிழமை, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணி புரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பணி நீட்டிப்பு தொடர் ஆணையை பழங்குடியினர் நலத்துறை இயக்குநரகம் திங்கள்கிழமை (நவம்பர் 14) வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஐ.இ தமிழ் தளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணி புரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் அக்டோபர் மாத ஊதியம் அளிப்பதற்கான பணி நீட்டிப்பு தொடர் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"