Advertisment

சி.பி.எஸ்.இ பாடத்தில் சனாதன பாடத்தை நீக்கவில்லை என்றால் எரிப்போம்; முத்தரசன் எச்சரிக்கை

அண்ணாமலை வன்முறையை தூண்ட கூடிய வகையில் பேசுகிறார். இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.

author-image
WebDesk
New Update
Mutharasan said there was no need to make the Karunanidhi pen memorial a controversy

இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்.

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர் எம்பி ஆ ராசா சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக, பாஜக வினர் கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர்.

ஒன்றிய அரசின் சிபிஎஸ் இ ஆறாம் வகுப்பு பாடத் திட்டத்தில் சனாதன பற்றி ஒரு பாடம் உள்ளது . அதில் மேல் ஜாதி, கீழ் சாதி குறித்து படத்தோடு விளக்கம் உள்ளது.

இதற்கு ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாடம் இடம்பெற்றுள்ள புத்தகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

தொடர்ந்து,

சனாதனம் குறித்து பேசிய ஆ ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதிசெய்வதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்து , யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு , அவரை சுட்டுக்கொன்ற , ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுக்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்.

அண்ணாமலை வன்முறையை தூண்ட கூடிய வகையில் பேசுகிறார். இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிப்பதாக குற்றம்சாட்டினார்.

பின்னர், தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்குரிய சம்பளத்தை கொடுக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment