மு.க.ஸ்டாலின் சென்ற தனி விமானத்தை ‘ரன்வே’யில் மறித்த உடும்பு: சேலத்தில் பரபரப்பு

MK Stalin: விமானத்திற்கு முன்பாக ஒரு உடும்பு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த உடும்புவை அதிகாரிகள் விரட்டினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற தனி விமானத்தை ‘ரன்வே’யில் உடும்பு மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் ஜீப்பில் சென்று அந்த உடும்பை விரட்டி விட்டனர்.

உடும்பு, பழைய சினிமாக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘பிடிச்சா உடும்புப் பிடியா பிடிக்கணும்’ என்றும் பேசக் கேள்விப்பட்டிருப்போம். வழவழப்பான சுவர்களிலும் கால்களால் கவ்விப் பிடித்து ஏறுவது உடும்பு இனத்தின் ஸ்பெஷாலிட்டி!

அபூர்வமான வெளிப்படும் உடும்பு இனம், சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற தனி விமானத்தை ரன்வேயில் மறித்த தகவல் வெளிவந்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, சேலம் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னைக்கு தனி விமானத்தில் புறப்பட்டார் ஸ்டாலின்.

ரன்வேயில் புறப்பட ஆயத்தமான விமானம், திடீரென நின்றது. உடனே விமான நிலைய அதிகாரிகள் ஒரு ஜீப்பில் சென்று பார்த்தனர். அப்போது விமானத்திற்கு முன்பாக ஒரு உடும்பு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த உடும்புவை அதிகாரிகள் விரட்டி விமானம் உடனடியாகக் கிளம்ப வழி வகுத்தனர்.

அதன்பிறகு விமானம் சென்னைக்கு புறப்பட்டு வந்தது. விமானத்தை உடும்பு மறித்த நிகழ்வு திமுக வட்டாரத்திலும் விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close