ஐஐடியில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்தால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்

ஐ.ஐ.டி. நிறுவனத்தின் அதிகாரிகள் மீது கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை

சென்னை ஐஐடியில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது நியமனம் ஐ.ஐ.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதை எதிர்த்து முனைவர் முரளிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தியை நியமித்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பி வருகிறார்.

இவரது நியமனமே செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இவர் விதிகளை மீறி பல இடங்களை நிரப்புகிறார். அதுவும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்கு பொது விளம்பரம் எதுவும் கொடுக்காமல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், ஆட்களை நியமித்துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், மேற்கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ‘ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பணி நியமனம் ஏதாவது நடந்தால், அந்த நியமனம் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியிருக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றவில்லை என்றால், ஐ.ஐ.டி. நிறுவனத்தின் அதிகாரிகள் மீது கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டு நீதிபதி விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iit case in chennai high court

Next Story
காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்விMarina Protest, Permission Granted, Ayyakannu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com