IIT Chennai students protested : சென்னை ஐ.ஐ.டியில் செவ்வாய் கிழமையன்று, பத்ம பூஷன் விருது பெற்ற மருத்துவர் பி.எம்.ஹெக்டேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களிட்டு போராட்டங்கள் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்தவர் பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவின் மிகவும் பிரபலமான இருதய மருத்துவர் இவர். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது பெற்றவர் இந்த மருத்துவர். சிறந்த கல்வியாளராகவும், மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.
அறிவியலை வளர்க்கும் முறை இது தானா ?
மேட்டர்ஸ் ஆஃப் மேட்டர்ஸ் என்ற தலைப்பின் கீழ் சிறப்பு கருத்தரங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தார் மருத்துவர். இவர் கருத்தரங்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டிருந்த மாணவர்கள் ரிப் சயன்ஸ், சாதி ஆஃப் குவாக்ஸ் என்று பதாகைகளை ஏந்தி, தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
ஹெக்டே தற்போது வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்திற்கு எதிராக அடிக்கடி பேசி வரும் நபர் அவர். இது தான் அறிவியலை வளர்க்கும் கலையா என்று மாணவர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸ்ஸையும் சாதி மாணவர்கள் குழுவையும் கேள்வி கேட்டுள்ளனர் போராட்டக்குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்!