New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/20/tASALxx1h5UBHobPE0Zu.jpg)
கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பேசிய கருத்துக்கு காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் மற்றும் பகுத்தறிவாளர் அமைப்புகள் விமர்சனம், கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் விழா ஜன.15 நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ஒரு சன்யாசிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடன் போக சொன்னார்கள். அந்த சன்யாசியின் பெயரை நான் மறந்துவிட்டேன். ஆனார் அவர் கோமியம் கொண்டு வரச் சொன்னார். அதை அவர் குடித்தார். 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிட்டது.
கோமியம் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான பிரச்சினைகளை எதிர்க்கும் சிறந்த மருந்து என்றார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, காமகோடியின் அலுவலகம் பதிலளிக்க வில்லை.
அவருக்கு நெருக்கமானவர்களின் கூற்றுப்படி, இந்த பேச்சு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது மற்றும் உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாப்பது போன்ற பரந்த நோக்கத்தில் கூறப்பட்டது. அவரது உரை முக்கியமாக நிலையான விவசாய நடைமுறைகளின் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவு மற்றும் பசுவின் சிறுநீரின் உயிரியல் பண்புகளை ஆராயும் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் வேரூன்றியுள்ளது என்று கூறினர்.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம், X ஒரு பதிவில், "போலி அறிவியலைக் கடத்துவது" ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனருக்கு "மிகவும் பொருத்தமற்றது" என்று கூறினார்.
காமகோடியின் கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்கையில், “நமது சென்னை ஐஐடி இயக்குனர், உயர் பொறுப்பில் இருப்பவர், ஏ.ஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் தனது தர்மத்தை பின்பற்றுகிறார். அவர் தனது சொந்த வழியில் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய விரும்புகிறார். இதை ஒரு மாணவர் சங்கம் அரசியலாக்குகிறது.
போராட்டத்தை நிறுத்துமாறும், நிறுவனத்தின் புனிதத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஐஐடி மெட்ராஸ் சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை” என்றார்.
VIDEO | Tamil Nadu BJP President K Annamalai (@annamalai_k) says, "It's unfortunate that our Chennai IIT Director, who is a very decorated person, who is an expert in AI, quantum computing, he chose to follow his dharma. He chose to pray to god in his own way. That is being… pic.twitter.com/cdJUrwZk3B
— Press Trust of India (@PTI_News) January 19, 2025
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras director praises cow urine’s medicinal value, faces criticism from Congress’s Karti Chidambaram, prominent rationalist outfits
சமூக சீர்திருத்தவாதி பெரியாரால் நிறுவப்பட்ட ஒரு முக்கிய பகுத்தறிவாளர் அமைப்பான திராவிடர் கழகம், காமகோடி "அறிவியல் சாராத" கருத்துக்களை பரப்புகிறது என்று கூறியது.
காமகோடி தனது கூற்றுகளை ஆதரிக்க அறிவியல் ஆதாரங்களை வழங்க வேண்டும் அல்லது எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.