சென்னை ஐஐடியில் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த பட்டமளிப்பு விழாவில் உடை நடைமுறை, இந்த முறை நடந்த 56வது பட்டமளிப்பு விழாவில் தகர்த்து எறியப்பட்டது.
பட்டமளிப்பு விழாவிற்கு பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடையை அணிய கல்வி நிர்வாகம் பரிந்துரைத்தது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அல்லது வெள்ளை நிற குர்தாவும் அதே நிறத்தில் வேஷ்டி, அல்லது பைஜாமா மற்றும் பேண்டுகள் அணிந்திருந்தனர்.
மாணவிகள் ஒரே நிறத்தில் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணியுமாறு கூறப்பட்டது. மாணவிகள் என்ன உடை அணிந்திருந்தாலும் வெள்ளை நிறத்தில் அங்கவஸ்திரத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதனை கல்லூரி நிர்வாகமே ரூ. 350 கொடுத்து வாங்க வேண்டுமென அறிவுறுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமர் பதவிஏற்றபிறகு, தமிழகத்துக்கு முதன்முறையாக வருகை தந்தார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா, பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில் செனட் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வெள்ளை ரோப் அணிந்திருந்தனர்.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த உடை முறையை வரவேற்கிறேன். இதுபோன்று பி.டெக் பட்டமளிப்பு விழாவில் மேற்கத்திய உடை அணிந்திருந்ததாக ஆந்திர மாணவி ஒருவர் கூறினார்.
கேரள மாணவி ஒருவர், இந்த உடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் பல்கலைக்கழக மானிய ஆணையம் பல்கலைக்கழங்கள் தங்களுடைய பட்டமளிப்பு விழாபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு ரூர்க்கி, பம்பாய் மற்றும் கான்பூரில் உள்ள ஐ.ஐடிக்கள் மாணவர்களை மேற்கத்திய உடைகளுக்கு பதிலாக இந்திய ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பிரதாயமும் தகர்ப்பு : பெரும்பாலும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி வரும்போது, ராக்ஸ்டார் வருவதை போல, அங்கு கூடியிருந்தோர் பெரும்சத்தத்துடன் வரவேற்றனர். இது அமெரிக்காவின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் ஹவுடி மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.