சென்னை ஐ.ஐ.டி-ல் இசைஞானி இளையராஜா பெயரில் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்' தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி-ல் இளையராஜா இசை மையம் எப்படி செயல்படும் என்பது குறித்து கல்லூரி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் இளையராஜா பெயரில் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்' தொடங்கப்பட்டுள்ளது. நாடுகளை இணைப்பது கலை. இந்த மையத்தில் பல கோணங்களில் இசையை கற்று முழுமையான சங்கீதம், வாதியம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படும். குறிப்பாக இசையமைப்பது என்பது கடினமான செயல். இசையமைப்பதில் புதுமை ஆகியவை செய்யப்படும்.
இளையராஜா அவர்களும் இங்கே வந்து வகுப்பு எடுப்பதாக சொல்லியுள்ளார். ஐ.ஐ.டியில் முதல் முறையாக இது போன்று மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்று இளையராஜா கூறினார்.
மையம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டி உள்ளோம். ஆராய்ச்சி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 10 மாதங்களில் கட்டிட வேலை முடிவடைந்து திறக்கப்படும். இது தற்போது Certificate Programme ஆக இருக்கும். மியூசிக் படிப்புகள் வழங்கப்படும். இதற்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இப்போது மியூசிக் பற்றி தெரிந்து புரிந்து கொள்வதற்கு தொடங்கப்படுகிறது. அதன் பின் படிப்படியாக மியூசிக் டிகிரி படிப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“