Advertisment

சர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்!

நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறையை எதிர்த்தோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்!

சென்னை ஐ.ஐ.டி-யில் சைவம் மற்றும் அசைவ உணவுகளை உண்ணும் மாணவர்கள் கைகளைக் கழுவ தனி இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisment

ஐஐடி மெட்ராஸில் நவீன தீண்டாமை சர்ச்சை:

சென்னை கிண்டியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஐஐடி கல்வி நிறுவனத்தில்  பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  குறிப்பாக இங்கு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக ஐஐடி மெட்ராஸ் சர்ச்சைகளுக்கு பெயர் போன இடமாக மாறிவருகிறது. மாட்டிறைச்சி திருவிழா,  தேசிய கீதத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருத பாடல், முத்த போராட்டம் என இதுவரை எழுந்த சர்ச்சைகள் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இதற்கிடையில் தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில்  நவீன தீண்டாமையாக  மற்றொரு பழக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதாவது,  கேன்டீனில் சுத்த சைவம் உண்பர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வழி, அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒருவழி என மொத்தம் 3 வழிகளும், இவர்கள் தனித்தனியாக கைகழுவ இடங்களும்பிரித்து அமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதே போல் மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும், என்பதும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நோட்டீசும் சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுத்  தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   மேலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தங்களது ஃபேஸ்புக்கில் இதுக் குறித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதுக்குறித்து ஐஐடி- யில் படிக்கு மாணவர்கள் சிலர் கூறியதாவது, “நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறையை எதிர்த்தோம். ஆனால், நிர்வாகம் காது கொடுத்து கேட்வில்லை.

இதுக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது,  சைவ மாணவர்கள் சாப்பிட தனி வழி, அசைவ உணவு விரும்பிகள் சாப்பிட தனி வழி, பியூர் வெஜ் சாப்பிடத் தனி வழி என பிரிக்கப்பட்டு விட்டது. இந்த நவீன தீண்டாமை  எந்தவிதத்திலும் ஆதரிக்க கூடியது இல்லை.

இது தொடர்பாக நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம்: என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்  கேன்டீனில் ஒட்டப்பட்டிருந்த  நோட்டீஸ்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும்,  இனிமேல்  இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படாது என்று கல்லூரி விடுதி செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு மாணவர்களுக்கு மெயில் அனுப்பி செயலாலர் மன்னிப்பு கோரியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  3 வகையான உணவு உண்ணும் மாணவர்களுக்கு தனி வழி,  அவர்கள் பயன்படுத்த தனி பாத்திரங்கள் என அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment