New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/02/suicide.jpg)
IIT Madra PhD Scholar Suicide
சமீப காலமாக ஐஐடியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
IIT Madra PhD Scholar Suicide
IIT Madras PhD Scholar Suicide : சென்னை ஐஐடியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் படித்துக் கொண்டிருந்தார். சென்னை ஐஐடியில் இருக்கும் சபர்மதி விடுதியில் தங்கி ஆராய்ச்சி பட்டப்படிப்பினை metallurgy துறையில் மேற்கொண்டு வந்தவர் அந்த பெண்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய அறைக்குள் சென்று தாழிட்டவரை பின்பு யாரும் காணவே இல்லை. இரண்டு நாட்கள் கழித்து, விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருப்பவர்கள், அப்பெண்ணின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளனர்.
அதன் பின்பு அந்த கதவை உடைத்து பார்த்த போது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல் துறை அனுப்பியுள்ளது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற ரீதியில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.
சமீப காலமாக ஐஐடியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஐஐடி மெட்ராஸ்ஸில் தற்கொலை செய்து கொண்ட இயற்பியல் பேராசியர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.