scorecardresearch

“சாதிய பாகுபாடுகளுக்கு ஆளானேன்” – ராஜினாமா செய்த ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியர்

அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் பாலினம் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி இல்லாமல் அதிகார மட்டங்களில் இருந்தவர்களிடம் இருந்து இந்த பாகுபாடு காட்டப்பட்டது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

IIT Madras professor resigns alleges caste discrimination

IIT Madras professor resigns : விபின் புதியத் வீட்டில் – மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வந்தார். 2019ம் ஆண்டு தான் பணிக்கு சேர்ந்த நாளில் இருந்தே சாதிய ரீதியாக தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டேன் என சக பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விபின் பள்ளிப் படிப்பை முடித்த அவர், டெல்லி பல்கலைக்கழகம் இந்து கல்லூரியில் பொருளாதாரம் படித்துள்ளார். முனைவர் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தன்னுடைய துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளியிட்ட விபின் கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு குறித்த மதிப்பீட்டாய்வு எழுதியுள்ளார்.

”அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் பாலினம் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி இல்லாமல் அதிகார மட்டங்களில் இருந்தவர்களிடம் இருந்து இந்த பாகுபாடு காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காரணங்களுக்காக நான் மற்ற கல்வி நிறுவனத்திற்கு செல்கிறேன்.

”பட்டியல் சாதி மற்றும் பிற பின்தங்கிய வகுப்பு ஆசிரிய உறுப்பினர்களின் அனுபவத்தை ஆய்வு செய்ய இந்த நிறுவனம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார். மேலும், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் உளவியலாளர்கள் இந்த குழுவில் இடம் பெற வேண்டும்.

இந்த குழுவில் புகார்களை தாக்கல் செய்வதன் மூலம், பாகுபாடுக்கு ஆளானவர்கள் நீதிமன்றங்களை நாடி பயன்பெறலாம். சமூகங்கள் ஒரு நேரத்தில் ஒரு சிறிய படி முன்னேறுகின்றன… இல்லையா?” என்ற கேள்வியுடன் தன்னுடைய கடிதத்தை அவர் முடித்துள்ளார்.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாணவர்களால் சுதந்திரமாக நடத்தப்பட்டு வரும் சிட்டாபார் (ChitaBar) அமைப்பு, இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களுக்கு கொண்டு வந்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2006 மற்றும் 2019-ன் படி, ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கும், பேராசிரியர் பணி நியமனங்களுக்கும் முறையாக இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் விரைவாக, ராஜினாமா செய்த பேராசிரியர் கூறியுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றோம் என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Iit madras professor resigns alleges caste discrimination