Arun Janardhanan
IIT-Madras student Fathima Latif kills self : சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த ஃபாத்திமா சனிக்கிழமை அதிகாலை தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தொடர்பாக அவருடைய பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பெட்டிசன் ஒன்றை அளித்துள்ளனர். மேலும் கேரள அரசு தமிழக போலீசார் நடத்தும் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஃபாத்திமா லத்திஃப், கேரள மாநிலம், கொல்லத்தில் பிறந்த இவர், சென்னையில் இயங்கி வரும் ஐ.ஐ.டியில் எம்.ஏ ஹூமானிட்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்ற பிரிவில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் தன்னுடைய விடுதி அறையில் சனிக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ஆசிரியர்களிடம் ஃபாத்திமா குறித்து கேள்வி எழுப்பிய போது “அவள் மிகவும் அறிவாளி. மேலும் வகுப்பில் முதலிடம் பெறும் அளவிற்கு படிக்கும் நபர்” என்று கூறினார்.
அவருடைய உடலை கைப்பற்றிய காவல்துறை தற்கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இறப்பதற்கு முன்பு எந்தவிதமான கடிதமும் அவர் எழுதவில்லை. அவருடைய அப்பா அப்துல் லத்தீஃப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இந்த இறப்பிற்கான நீதி வேண்டும் என்று முறையிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்னுடைய இறப்பிற்கு காரணம் இவர் தான் என்று செல்ஃபோனில் பதியப்பட்ட நோட்ஸ் மேற்கோள் காட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவருடைய செல்போன் காவல்துறையின் கஸ்டடியில் உள்ளது.
அவருடைய துறைத் தலைவர் உமாகாந்த் தாஸிடம் கேட்ட போது “ஃபாத்திமா எப்படி உயிர் இழந்தார்? ஏன் உயிரிழந்தார் என்பது இன்னும் எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்று அவர் கூறினார்.
ஃபாத்திமா இது போன்ற மன அழுத்தத்தில் இருப்பது குறித்து எங்களிடம் எப்போதும் தெரிவித்ததில்லை. தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அவளுக்கு ஏதும் நிகழ்ந்திடவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆசிரியர் குறித்து மட்டும் அவள் அடிக்கடி எங்களிடம் தெரிவிப்பது வழக்கம். அந்த பேராசிரியர் மற்ற மாணவர்களையும் இப்படி அழ வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மெஸ்ஸில் அமர்ந்து தினம் இரவு 9 மணிக்கு அவள் அழுது கொண்டிருந்ததாகவும் எங்களுக்கு கூறப்பட்டது. சி.சி.டி.வி ஆதாரம் கிடைத்தால் அனைத்தும் தெரிந்துவிடும் என அப்துல் லத்தீஃப் வேதனையுடன் அறிவித்தார்.
மேலும் படிக்க :சென்னை ஐஐடியில் கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை
”ஃபாத்திமாவின் மரணத்திற்கு பிறகு அவருடைய துறையில் 45 நாட்களுக்கு வகுப்புகள் ஏதும் எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐஐடி நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் தரவரிசையில் இடம் பெற்றார் ஃபாத்திமா” என்றும் ஃபாத்திமாவின் அப்பா அறிவித்தார்.
ஆனால் உமாகாந்த் தாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எந்த வகுப்புகளும் தள்ளி வைக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் எப்போதும் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாணவர்கள் மட்டும் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அது குறித்து நாங்கள் பேசி வருகின்றோம் என்று அவர் அறிவித்தார்.
ஃபாத்திமா மரணத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பேராசியர் கடந்த வாரம் தான் இம்மாணவர்களின் இண்டெர்நெல் தேர்வு விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளித்தார். ஃபாத்திமா மற்ற அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் இதில் மட்டும் இரண்டாம் இடம் பிடித்தார். இதற்காகவா தற்கொலை செய்து கொண்டார்? என்று கேள்வி எழுப்பினார் அவர். ஃபாத்திமாவின் நண்பர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். ஆனால் யாருக்கும் இவருடைய தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
”ஃபாத்திமா மிகவும் சிறந்த மாணவி. எப்போதும் வகுப்பில் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பாள். அவள் இறந்துவிட்டாள் என்பதை இன்னும் எங்களால் ஏற்க இயலவில்லை” என அப்பெண்ணுக்கு வகுப்பெடுத்த மற்றொரு பேராசிரியர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.