சென்னை ஐஐடி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு, சென்னை ஐஐடி கல்லூரியில் ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இருவர் கல்லூரியில் உள்ள கேண்டனில் கட்டி அணைத்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை தூரத்தில் இருந்தப்படி ஒருநபர் ஃபோட்டோ எடுத்துள்ளார்.
இதை கவனித்த அந்த பெண், எங்களின் அனுமதி இல்லாமல், எப்படி எங்களை புகைப்படம் எடுப்பீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அதற்கு அந்த நபர், இந்த புகைப்படத்தை என் பிள்ளைகளிடம் காட்ட போகிறேன். வரங்காலத்தில் அவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது என்று பதில் அளித்துள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள், அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதன் பின்பு, அந்த நபர் மொபைலில் எடுத்த ஃபோட்டை அழித்து விட்டு அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் சென்னை ஐஐடிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம், மாணவர்கள் திடீரென்று ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஐஐடியை பொறுத்தளவில் பாலியல் பேதமின்றி, மாணவ-மாணவிகள் நெருக்கமாக பழகிவருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில், வளாகத்தில் நுழைந்த நபர், தங்களை அனுமதியின்றி ஃபோட்டோ எடுத்தது மட்டுமில்லாமல், ஒழுக்கம் குறித்து விமர்சித்தது கண்டிக்க தக்கது என்று அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கட்டிப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் மாணவ- மாணவியர் ஒருவரையொருவர் கட்டி அணைத்தப்படி போராட்டம் நடத்தினர். மார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
நன்றி: நியூஸ் 7