சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) சாலைப் பாதுகாப்பிற்காக எஸ்.என்.எஸ்., அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் ஓட்டுநர் நடத்தை குறித்து பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய முடிவுகள், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த சிமுலேட்டர் அடிப்படையிலான பாடத்திட்டத்தை உருவாக்குதல், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் மற்றும் வேன்களுக்கான ஓட்டுநர் நடத்தை மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் யோசனைகளை வளர்ப்பது என பல்வேறு பாடங்கள் அடங்கும்.
இந்த யோசனைகளை கோயர்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பைப் பயன்படுத்தி தயாரிப்புகளாக முதிர்ச்சியடைய உதவுவது ஆகியவை அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil