Advertisment

உணவு பழக்கத்தை வைத்து மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது: ஆர்.எஸ் பாரதிக்கு இல. கணேசன் கண்டனம்

அண்மையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “நாய்க்கறி சாப்பிடும் நாகர்கள் கவர்னர் ஆர்.என். ரவியை விரட்டிவிட்டனர்" என்றார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu CM M K Stalin telephonic talked to West Bengal Governor Ila Ganesan about his health condition

நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்

நாகா மக்கள் தொடர்பான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேச்சுக்கு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “நாய்க்கறி சாப்பிடும் நாகர்கள் கவர்னர் ஆர்.என். ரவியை விரட்டிவிட்டனர். தமிழர்கள் உப்புப் போட்டு சாப்பிடுகிறோம்” என்றார்.
இதற்கு ஆர்.என். ரவி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நாகர்கர் உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். அவர்கள் தொடர்பான ஆர்.எஸ் பாரதியின் கருத்துகள் தவறானவை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விளக்கம் அளித்த ஆர்.எஸ் பாரதி, “கவுகாத்தி நீதிமன்றமே அவர்கள் நாய்க்கறி தின்பார்கள்” எனக் கூறியுள்ளது என்றார்.
இந்த நிலையில் நாகாலாந்து கவர்னர் இல. கணேசன், ஆர்.எஸ் பாரதியின் பேச்சை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், “உணவுப் பழக்கத்தை வைத்து ஒருவரை கொச்சைப்படுத்தக் கூடாது. நாகர்கள்-தமிழர்கள் இடையே நல்லுறவு உள்ளது. இதனை கெடுக்கும் வகையில் ஆர்.எஸ் பாரதி பேசக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rs Bharathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment