இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Advertisment
பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த இளையராஜா தனது 14 வயதில், அவர் தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது 80வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.… pic.twitter.com/Os1dE1UJKH
அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்தினார். இளையராஜாவிற்கு பொன்னாடை போற்றினார். மேலும் புத்தகத்தை பரிசளித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் நேரு மற்றும் பொன்முடி உடன் இருந்தனர். மேலும் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
,
இசைஞானி @ilaiyaraaja அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். pic.twitter.com/2ZOnjg8d1G