Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… ஒரு நாள்கூட பங்கேற்காத எம்.பி. இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான இளையராஜா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை என, ராஜ்யசபா இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Ilaiyaraaja, Rajya Sabha MP Ilaiyaraaja, Parliament Winter Session attendance, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், ஒரு நாள்கூட பங்கேற்காத எம்.பி இசைஞானி இளையராஜா, இளையராஜா, Ilaiyaraaja, Winter session parliament, zero attendence, IE news, news today, latest news, chennai news, tamil nadu RS MP

இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான இளையராஜா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை என, ராஜ்யசபா இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா ஜூலை 2022-ல் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்.பி-யாக நியமனம் செய்யப்பட்டார்.

Advertisment

முன்னாள் விளையாட்டு வீராங்கணை பி.டி. உஷா, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் மற்றும் புரவலரும் ஆன்மீகத் தலைவருமான வீரேந்திர ஹெக்கடே ஆகிய 3 முக்கிய பிரபலங்களுடன் இசைஞானி இளையராஜா ராஜ்ய சபா எம்.பி-யாக நியமனம் செய்யப்பட்டார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

13 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பி.டி உஷா எல்லா நாட்களும் வருகை தந்து கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்கடே 5 நாட்கள் கலந்து கொண்டார், விஜயேந்திர பிரசாத் 2 நாட்கள் கலந்துகொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற தகவல்கள் காட்டுகின்றன.

இது குறித்து கருத்து கேட்க தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இளையராஜாவை தொடர்பு கொண்டபோது அவர் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை. ரசிகர்களால் இசைஞானி என்று புகழப்படும் இசையமைப்பாளர் இளையராஜா, பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 2018-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

இளையராஜா ராஜ்யசபா எம்.பி-யாக நியமனம் செய்யப்பட்டபோது, பரவலான பாராட்டுகளைப் பெற்றார். நடிகர் ரஜினிகாந்த், “அன்புள்ள நண்பருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்” முதலில் வாழ்த்து தெரிவித்தார். கமல்ஹாசன் அவரை ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று வர்ணித்தார்.

இளையராஜா ராஜ்யசபா எம்.பி-யாக நியமனம் செய்யப்பட்டபோது அவர் கூறியதாவது: “இந்திய அரசின் மதிப்புமிக்க அங்கீகாரத்திற்காக என்னை வாழ்த்திய எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து ட்வீட் செய்திருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ilaiyaraaja Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment