இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 47.
தமிழ்த் திரை இசையை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வரும் இசைஞானி இளையாராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (25.01.2024) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக பல பாடல்களைப் பாடியுள்ளார். இயகுனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளியான பாரதி படத்தில், இளையராஜாவின் இசையில் ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலைப் பாடியதற்காக பவதாரிணி சிறந்த பின்னணி பாடகிக்காக தேசிய விருது பெற்றவர். 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பவதாரிணி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார்.
பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மேல் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47. பவதாரிணியின் உடல் நாளை (26.01.2024) சென்னைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடகி பவதாரிணி உடல்நலக் குறைவால் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“