சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று

bangalore victoria hospital : பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ilavarasi release sasikala sister ilavarasi
ilavarasi release sasikala sister ilavarasi

சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறிவனர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டைனை விதிக்கப்பட்டு பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனை 4 ஆண்டுகள் முடிவு பெறவுள்ள நிலையில், வரும் 27-ந் தேதி சசிகலா விடுதலையாக இருந்தார். அதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் இளவரசியும் விடுதலையாக இருந்தார்.

இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக இயங்கி வந்த நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், தீவிர மருத்து கண்கானிப்பில் இருந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை வெளியான மருத்தவமனை அறிக்கையில் அவர் உடல்நலம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் சசிகலா தற்போது தீவிர மருத்துவ கண்கானிப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய பரபரப்பாக சிறையில் ச்சிகலாவுடன் இருந்த இளவரசிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூர் விக்டோரியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதகையில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைபடுத்தப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெங்களூர் பார்ப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் கூறுகையில், வெள்ளிக்கிழமை (இன்று) ஜே இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அதன்பிறகு, சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் “சசிகலா மற்றும் இளவரசி இருவரும் ஒரு அறையில் இருந்தனர். அந்த அறையில்,வேறு யாரும் இல்லை.

இதில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சசிகலாவுடன் சென்ற இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ilavarasi tests corona positive bangalore victoria hospital

Next Story
‘வாங்க கைகோர்ப்போம்’ ராகுல் காந்தி தமிழ் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com