கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக போலி மருத்துவ தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுப்பாளையத்தில் பார்மசி கல்லூரி நடத்தி கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சிவகுருநாதன், உமா மகேஸ்வரி தம்பதி, அரசு மருந்தாளுநர், அரசு செவிலியர், மருந்து விற்பனை பிரதிநிதி, 2 மருந்த உரிமையாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மணிமேகலை வயது 59, கடலூர் எஸ்.பி ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாரில் புதுப்பாளையம் எஸ்.ஐ.டி நர்சிங் இன்ஸ்டியூட்டில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிவகுருநாதன், உமாமகேஸ்வரி ஆகியோர்கள் போலிமருத்துவராக செயல்பட்டு, கருக்கலைப்புக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள், மாத்திரைகள் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, கடலூர் எஸ்.பி தலைமையில் போலீசார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் குற்ற 322/25 பிரிவு 61
(2), 318(2) BNS r/w 34 of தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் மேற்பார்வையில் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்
ஆய்வாளர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.
சோதனையில், அங்கே கருக்கலைப்பு சாதனங்கள், மாத்திரைகள், சிரஞ்சிகள் மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள் இருந்ததை கை பற்றினர். அதன் பின்பு விசாரணை செய்ததில் சிவகுருநாதன், மற்றும் உமாமகேஸ்வரி ஆகியோர்கள் மருத்துவ படிப்பு படிக்காமல் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவது தெரிய வந்தது.
சிவகுருநாதன் வயது 55, த/பெ ரத்தினம், புதுப்பாளையம், உமாமகேஸ்வரி வயது 40, க/பெ சிவகுருநாதன், புதுப்பாளையம் ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி வயது 37, த/பெ கலியன், வைடிப்பாக்கம், பண்ருட்டி, வீரமணி வயது 36, த/பெ வீராசாமி, கார்மாங்குடி, அபியால் வயது 50, க/பெ மைக்கில் ராஜ்குமார், ரத்தினம் தெரு, நெல்லிக்குப்பம், தங்கம் வயது 43, க/பெ ஆனந்தவேல், வடக்கு தெரு, பெரியகாரைக்காடு, ஆகியோர்களை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்